பக்கங்கள் செல்ல

Tuesday, October 11, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!



ஏக இறைவனின் திருப்பெயரால்


போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
      கிறித்தவ உலகம் பல காலமாக ஒரு கருத்தை முன்வைத்து வருகிறது. அதாவது ஏசு கைது செய்யப்பட்ட பிறகு போந்துயு பிளாத்து முன்பாக நடந்த விசாரனையில் பரபாஸ் என்பவர் ஏசுவிற்கு ஈடாக விடுவிக்கப்பட்டதாக கூறிவருகிறது.
   காவல் பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது. அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவை கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்காக விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள். தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். (மத்தேயு 27:15-26).


    மேலே குறிபிட்ட வசனத்தில் இரண்டு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
1.கிறிஸ்து எனப்பட்ட ஏசு 2.பரபாஸ். 

      அதாவது ஏசுவை மட்டுமே கிறிஸ்து என்ற அடைமொழியால் அழைப்பதெல்லாம் ஏசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகுதான். அதுவரை கிறிஸ்து என்ற வார்த்தை பொதுப்பெயர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க கலைகளஞ்சியம் பின்வருமாறு கூறுகிறது:
CHRIST
                The word Christ, Christos, the Greek equivalent of the Hebrew word Messias, means "anointed." According to the Old Law, priests (Exodus 29:29; Leviticus 4:3), kings (I Kings 10:1; 24:7), and prophets (Isaias 61:1) were supposed to be anointed for their respective offices; now, the Christ, or the Messias, combined this threefold dignity in His Person. It is not surprising, therefore, that for centuries the Jews had referred to their expected Deliverer as "the Anointed"; perhaps this designation alludes to Isaias 61:1, and Daniel 9:24-26, or even to Psalms 2:2; 19:7; 44:8. Thus the term Christ or Messias was a title rather than a proper name: "Non proprium nomen est, sed nuncupatio potestatis et regni", says Lactantius (Inst. Div., IV, vii). The Evangelists recognize the same truth; excepting Matthew 1:1, 18; Mark 1:1; John 1:17; 17:3; 9:22; Mark 9:40; Luke 2:11; 22:2, the word Christ is always preceded by the article. Only after the Resurrection did the title gradually pass into a proper name, and the expression Jesus Christ or Christ Jesus became only one designation. But at this stage the Greeks and Romans understood little or nothing about the import of the word anointed; to them it did not convey any sacred conception. Hence they substituted Chrestus, or "excellent", for Christians or "anointed", and Chrestians instead of "Christians." There may be an allusion to this practice in I Peter 2:3; hoti chrestos ho kyrios, which is rendered "that the Lord is sweet."(Catholic Encyclopedia (1913)/Origin of the Name of Jesus Christ,Charles G. Herbermann)
      
     ஆக பிலாத்தின் “கிறிஸ்து எனப்படுகிற இயேசு என்ற சொல்லாக்கம் சுவிஷேசத்தை தொகுத்தவரின் சொல்லாக்கம் தான். இதை மனதில் வைத்து கொண்டு பின் வரும் பகுதியை வாசிப்பது சிறப்பாணதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.


     மேற்குறிபிட்ட வசனத்தில் காணப்படும் பரபாஸ் என்ற பெயர் Βαρ-αββᾶς என்று பல கிரேக்க பிரதிகளில் தெளிவாக இடம் பெற்றுள்ளது. அதாவது பரபாஸ் என்பதற்கு பிதாவின் மகன் என்று பொருளாகும். இந்த வார்த்தை இடம்பெறும் மத்தேயு 27:16ல் இன்னும் ஒரு குழப்பமும் இருக்கிறது. அதாவது பல கிரேக்க பிரதிகளில் ஏசு பிதாவின் மகன் என்று காணப்படுகிறது.  மேற்கூறிய மத்தேயு 27:16 குறித்து Expositors Bible Commentary பின் வருமாறு கூறுகிறது,

Matthew 27:16. εἶχον: they, the people (ὄχλῳ, Matthew 27:15).—ἐπίσημον: pointing not to the magnitude of his crime, but to the fact that for some reason or other he was an object of popular interest.—Βαραββᾶν, accusative ofΒαραββᾶς = son of a father, or with double ρ, and retaining the v at the end, Bar-Rabban = son of a Rabbi. Jerome in his Commentary on Mt. mentions that in the Hebrew Gospel the word was interpreted filius magistri eorum. Origen mentions that in some MSS. this man bore the name Jesus, an identity of name which makes the contrast of character all the more striking. But the reading has little authority. (Expositors bible Commentary Vol:1,P.No:325)

     அதாவது சில கிரேக்க பிரதிகளில் பரபாஸின் பெயர் ஏசு என்று காணப்படுவதாக ஓரிகன் (கிபி 2-3ம் நூற்றாண்டு) கண்டதாக கூறப்படுகிறது. மேலும் THE TEXT OF THE NEW TESTAMENT புத்தகத்தில் Bruce Metzger பின்வருமாறு கூறுகிறார்

      At other times Origen declared his preference among variant readings, but often his choice appears to be based on considerations other than those of a purely textual nature. Thus, when he dismisses the reading "Jesus Barabbas" in favor of simply "Barabbas" (Matt.27.16-17), he does so because he thinks that the name "Jesus" was never applied to evil-doers (THE TEXT OF THE NEW TESTAMENT P.No:201)

     அதாவது ஏசு என்ற பெயருடையவர் தவறு செய்யமாட்டார் என்ற காரணத்தினால்தான் ஓரிகன் (சிகப்பா இருக்கவேன் தப்பு செய்யமாட்டான் என்பது போல் உள்ளது) அந்த வார்த்தையை நீக்கிவிட்டாராம். சுவிஷேசங்களில் ஏசுவின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அனைத்தும் பரபாஸ் மீது சுமத்தப்படுவதற்கு ஏதுவான குற்றமாக உள்ளதை நம்மால் காணமுடியும். முதலில் பரபாஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வரிசை படுத்துவோம்.

பரபாஸ் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள்

    காவல் பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக் கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது. கலகம் பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். (மார்க்:15:6,7)

       அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலை பாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.(லூக்கா 23:19)
   அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான். (யோவான்:18:40)

மேலே குறிப்பிடபட்ட வசனங்களில் லூக்கா 23:19 பழைய கிரக்க பிரதிகளில் இல்லை
  
பரபாஸின் மீது சுமத்தப்பட்ட குற்றமானது:

1.கலகம் செய்து கொலை செய்த கூட்டத்தாரில் ஒருவர்.

2.கள்ளனாயிருந்தான் என்பது. (ஆனால் ISV , TLV போன்ற தற்கால மொழியாக்கங்கள் இதை புரட்சிகாரன் என்று குறிப்பிடுகிறது. மேலும் ஒரு புரட்சியாளன் மீது ரோம் போன்ற அரசாங்கம் சுமத்தும் குற்றங்கள் எல்லாம் இப்படிதான் இருக்கும்)

ஏசுவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்:
      அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய், இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரி கொடுக்கவேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத்தொடங்கினார்கள். (லூக்கா 23:2)
     அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடு தொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள். (லூக்கா 23:5)
     அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டி விடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.(லூக்கா 23:14)
      அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.(யோவான் 18:33-38).

ஏசுவின் மீது சுமத்தப்பட்ட குற்றம்:
1.கலகம் செய்தல்: இதை போந்துயு பிலாத்து மறுத்துவிட்டார்.(லூக்கா 23:14)

2.வரி செலுத்தாமலிருக்க  கூறியதாக குற்றச்சாட்டு. ஆனால் ஏசு வரி செலுத்திதல் குறித்து தனது நிலையை தெளிவாக கூறிவிட்டார்:

      அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி,தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லையென்றும் (அக்கறையில்லையென்றும்) அறிந்திருக்கிறோம். ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள் .(மத்.22:15-21)
  

     இப்படி பொது மக்கள் முன்பாக வரி செலுத்துவதை ஏசு சரி என்கிறார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுமே ஏசுவிற்கு உரியது அல்ல. ஆனால் இவை இரண்டும் பரபாஸிற்கு மிகச்சரியாக பொருந்தும். அவர் சார்ந்த இயக்கம் குறித்து வரலாற்று ஏடுகள் பின் வருமாறு கூறுகிறது.



      இத்தகைய கொள்கைகளை கொண்ட கூட்டத்தின்ரில் ஒருவர்தான் பரபாஸ். மேற்குறிபிட்ட வற்றை ஆய்வு செய்கையில் ஒன்று நன்றாக புலப்படுகிறது. அதாவது யூத குருமார்களுக்கும் ரோம் அரசிற்கும் பொது எதிரியான பரபாஸ்தான் மிக ஆபத்தானவர். இந்த பரபாஸ்தான் உன்மையில் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும். மேலும் இத்தகைய பரபாஸ் போன்ற ஒரு யூத புரட்சியாளனை விடுவிப்பது போந்தியு பிலாத்தையே பதம் பார்த்துவிடும் என்பதை பிலாத்து அறியாமலா இருப்பார். 
நாம் மேலே கூறும் செய்தியானது அனுமானம் அல்ல. இதோ ஜோசபஸின் நூலான THE ANTIQUITIES OF JEWSல் இருந்து,
 
3.When therefore Herod had thus got clear of the multitude, and had dissipated the vehemency of passion under which they had been, the greatest part of the people were disposed to change their conduct, and not to be displeased at him any longer ; but still some of them continued in their displeasure against him, for his introduction of new customs, and esteemed the violation of the laws of their country as likely to be the origin of very great mischiefs to them, so that they deemed it an instance of piety rather to hazard themselves [to be put to death,] than to .seem as if they took no notice of Herod, who, upon the change he had made in their government, introduced such customs, and that in a violent manner, which they had never been used to before, as indeed in pretence a king, but in reality one that .showed himself an enemy to their whole nation ; on which account ten men that were citizens [of Jerusalem,] conspired together against him, and sware to one another to undergo any dangers in the attempt, and took daggers with them under their garments [for the purpose of killing Herod.] Now there was a certain blind man among those conspirators who had thus sworn to one another, on account of the indignation he had against what he heard to have been done; he was not indeed able to afford the rest any assistance in the undertaking, but was ready to undergo any suffering with them, if so be they should come to any harm, insomuch that he became a very great encourager of the rest of the undertakers.

4. When they had taken this resolution, and that by common consent, they went into the theatre, hoping that, in the first place, Herod should not escape them, as they should fall on him so unexpectedly; and supposing, however, that if they missed him, they should kill a great many of those that were about him; and this resolution they took, though they should die for it, in order to suggest to the king what injuries he had done to the multitude. These conspirators therefore, standing thus prepared beforehand, went about their design with great alacrity; but there was one of those spies of Herod that were appointed for such purposes, to fish out and inform him of any conspiracies that should be made against him, who found out the whole affair, and told the king of it, as he was about to go into the theatre. So when he reflected on the hatred which he knew the greatest part of the people bore him, and on the disturbances that arose upon every occasion, he thought this plot against him not to be improbable. Accordingly, he retired into his palace, and called those that were accused of this conspiracy before him by their several names ; and as, upon the guards falling upon them, they were caught in the very fact, and knew they could not escape, they prepared themselves for their ends with all the decency they could, and .so as not at all to recede from their resolute behaviour, for they showed no shame for what they were about, nor denied it; but when they were seized, they showed their daggers, and professed, that the conspiracy they had sworn to was a holy and a pious action ; that what they intended to do was not for gain, or out of any indulgence to their passions, but principally for those common customs of their country, which all the Jews were obliged to observe, or to die for them. This was what these men said, out of their undaunted courage in this conspiracy. So they were led away to execution by the king's guards that stood about them, and patiently underwent all the torments inflicted on them till they died. Nor was it long before that spy who had discovered them, was seized on by some of the people, out of the hatred they bore to him ; and was not only slain by them, but pulled to pieces, limb from limb, and given to the dogs. This execution was seen by many of the citizens, yet would not one of them discover the doers of it, till upon Herod's making a strict scrutiny after them, by bitter and severe tortures, certain women that were tortured confessed what they had seen done ; the authors of which fact were so terribly punished by the king, that their entire families were destroyed for this their rash attempt ; yet did not the obstinacy of the people, and the undaunted constancy they showed in the defence of their laws, make Herod any easier to them, but he still strengthened himself after a more secure manner, and resolved to encompass the multitude every way, lest such innovations should end in an open rebellion. (Antiquties of Jews: book 15: Ch 8.3-4)

      மேலே கூறப்பட்ட செய்தியில் ஏரோதுக்கு எதிராக சதி செய்தவர்கள் எப்படி துண்டு துண்டாக வெட்டபட்டு நாய்களுக்கு இறையாக்கப்பட்டனர் என்பதையும் காணமுடிகிறது. இத்தகைய கூட்டதை சார்ந்த கலகத்தில் ஈடுபட்ட ஏசு பரபாஸ் எப்படி பிலாத்தினால் விடுவிக்கப்பட்டிருப்பார். அதுவும் ஏசு கிறிஸ்து குற்றமற்றவர் என்று அறிந்திருந்தும் பிலாத்து பரபாஸை விடுவித்தார் என்பது பிலாத்தின் உயிரை பதம்பார்த்துவிடாதா??? மேலும்  ஜியோலட்கள் குறித்து ஜோசப்பஸின் கருத்துகளை காண்போம்.

     6. But of the fourth sect of Jewish philosophy, Judas the Galilean was the author. These men agree in all other things with the Pharisaic notions ; but they have an inviolable attachment to liberty ; and they say that God is to be their only Ruler and Lord. They also do not value dying any kinds of death, nor indeed do they heed the deaths of their relations and friends, nor can any such fear make them call any man Lord ; and since this immovable resolution of theirs is well known to a great many, I shall speak no further about that matter ; nor am I afraid that anything I have said of them should be disbelieved, but rather fear, that what I have said is beneath the resolution they show when they undergo pain ; and it was in Gessius Florus's time that the nation began to grow mad with this distemper, who was our procurator, and who occasioned the Jews to go wild with it by the abuse of his authority, and to make them revolt from the Romans : and these are the sects of Jewish philosophy. (Antiquties of Jews: book 18: Ch 1.6)

  மேற்குறிபிட்ட குறிப்புகளில் ஜியோலட்டுகளின் குணங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களது விஷயத்தில் ரோம் அரசாங்கம் எத்தகைய கடுமையை காட்டியது என்பது தெள்ளத்தெளிவாக காணப்படுகிறது.  இத்தகைய பிரிவை சேர்ந்த் ஏசு பரபாஸ் விடுவிக்கப்படுவாரா அல்லது ஏசு கிறிஸ்து விடுவிக்கப்படுவாரா? ஆனால் ஜோசப்பஸின் நூலில் இருந்து கிறித்தவ உலகம் பின்வரும் பகுதியை சுட்டிகாட்டி ஏசு கிறிஸ்துதான் கொல்லப்பட்டார் என்று வாதிடுகிறது.

 2. But Pilate undertook to bring a current of water to Jerusalem, and did it with the sacred money, and derived the origin of the stream from the distance of two hundred furlongs. However, the Jews * were not pleased with what had been done about this water ; and many ten thousands of the people got together, and made a clamour against him, and insisted that he should leave off that design. Some of them also used reproaches, and abused the man, as crowds of such people usually do. So he habited a great number of his soldiers in their habit, who carried daggers under their garments, and sent them to a place where they might surround them. So he bade the Jews himself go away ; but they boldly casting reproaches upon him, he gave the soldiers that signal which had been beforehand agreed on ; who  laid upon them much greater blows than Pilate had commanded them, and equally punished those that were tumultuous, and those that were not, nor did they spare them in the least ; and since the people were unarmed, and were caught by men prepared for what they were about, there were a great number of them slain by this means, and others of them ran away wounded ; and thus an end was put to this sedition.
3. Now, there was about this time, Jesus, a wise man, if it be lawful to call him a man, for he was a doer of wonderful works,—a teacher of such men as receive the truth with pleasure. He drew over to him both many of the Jews, and many of the Gentiles. He was [the] Christ; and when Pilate, at the suggestion of the principal men amongst us, had condemned him to the cross, those that loved him at the first did not forsake him, for he appeared to them alive again the third day, as the Divine prophets had foretold these and ten thousand other wonderful things concerning him; and the tribe of Christians, so named from him, are not extinct at this day.( (Antiquties of Jews: book 18: Ch 3.2,3)
    அதாவது ஏசு மரணம் குறித்தும் ஏசுவின் உயிர்தெழுதல் குறித்தும் கூறப்படுவதாக கிறித்தவ உலகம் கூறுகிறது. ஆனால் உன்மையில் ஜோசப்பஸின் பல பிரதிகளை ஆய்வு செய்த ஜேம்ஸ் டன் போன்ற பல அறிஞர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
     Josephus the Jewish historian in his Jewish Antiquities (written in the 90s) refers to Jesus twice. The first passage has clearly been subject to Christian redaction, but there is a broad consensus3 that Josephus wrote something like the following:
    At this time there appeared Jesus, a wise man. For he was a doer of startling deeds, a teacher of people who received the truth with pleasure. And he gained a following both among many Jews and among many of Greek origin. And when Pilate, because of an accusation made by the leading men among us, condemned him to the cross, those who had loved him previously did not cease to do so. And up until this very day the tribe of Christians (named after him) has not died out (Ant. 18.63-64). (James Dunn, Jesus remembered P.No:141)


அதாவது

1.ஏசு குறித்து கிறிஸ்து என்ற குறிப்பு இல்லை. 2.ஏசுவின் உயிர்தெழுதல் குறித்தும் இல்லை. 3.ஆனால் கிறித்தவர்கள் குறித்த குறிப்பு இடம்பெறுகிறது.

   மேலும் ஜோசப்பஸ் மேற்குறிபிட்ட பகுதியானது ஏரோதின் அடக்குமுறை அதை தொடர்ந்து இந்த பகுதி இடம் பெறுகிறது. ஏரோதின் அடக்குமுறையை எதிர்த்து ஏசு கிறிஸ்து போராட வில்லை என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்று. அதை பிலாத்தே ஏற்று கொண்ட விஷயம். ஆக ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட ஒரு மூகாந்திரமும் இல்லை. இரண்டு ஏசுவில் எந்த ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதற்கு எந்த அணித்தரமான வரலாற்று குறிப்புகளும் இல்லை (சுவிஷேசத்தை தவிர) என்பதுதான் நிதர்சனமான உன்மை. மேலும் ஜோசப்பஸின் குறிப்புகளில் காணப்படும் ஏசுவின் செய்திகளில் கிறித்தவ உலகத்தின் திருவிளையாடல் என் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. அதாவது சிலுவையில் ஏற்றப்பட்ட ஏசு கலகத்தில் ஈடுபட்ட ஏசு. ஏக இறைகொள்கையை போதித்த இறைதூதர் ஏசு அல்ல என்பதுதான் அது. ஆனாலும் இதற்கான நேரடி வரலாற்று பதிவுகள் இல்லை என்று கிறித்தவ உலகம் கூறிவருகிறது. ஆனால் இன்றிருக்கும் சுவிஷேசங்களின் சமகால பதிவுகளான அப்போக்ரிப்பா-தள்ளப்பட்டவை என்ன கூறுகிறது என்பதை வரும் தொடரில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண                    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண

No comments:

Post a Comment